தமிழ்த்துறை

உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம்

மாணவியரின் அறிவாற்றலை மேம்படுத்தவும், தனித்தன்மையான திறன்களை வெளிக்கொணரச் செய்வது முத்தமிழ் மன்றத்தின் தலையாய நோக்கமாக அமைகிறது. தமிழ் இலக்கியத்தில் தேர்ந்த புலமை பெற்ற அறிவாளர்களை, கருத்தாளர்களை உரை நிகழ்த்த செய்து அதன் மூலம் தமிழ் இலக்கிய நுண்மாண் நுழை புலத்தினை இம்மன்றத்தின் மூலம் மாணவியர் பெறுகின்றனர். கலந்துரையாடல், வினாடி வினா போட்டிகள் ஆகியவற்றின் மூலம் படைபாற்றலை வளர்த்து கொள்கின்றனர்.

2023 - 2024 கல்வி ஆண்டிற்கான மன்ற செயல்பாடுகள்

22.07.2023 அன்று மன்ற தொடக்க விழா நடைபெற்றது. 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான மன்ற செயலாளராக முது.முனைவர்.க.மகேஸ்வரி பொறுப்பேற்றார். மன்ற மாணவர் செயலாளராக மு.சுபா , மன்ற மாணவர் துணைச் செயலாளராக அ.சரஸ்வதி பொறுப்பேற்றார். அவ்விழாவில் அரபுத்துறைத் தலைவர்.S.A.K.முத்து மொகுதும் பாத்திமா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரபுத் தமிழ் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆகஸ்ட் மாதத்தில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு சொற்பொழிவு நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதத்தில் பாரதியார் நினைவு தினமும் அக்டோபரில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியும் மன்றத்தின் சார்பில் நடைபெறும். பாரதியார் பிறந்த தினத்தை வஜீஹாவின் வண்ணக் கலை விழாவாக அருகாமை பள்ளி மாணவியருக்கு நடத்தப்பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவும் பிப்ரவரி மாதத்தில் உலக தாய்மொழி தினமும் நடத்தப்பட உள்ளது. முத்தமிழை போற்றும் முத்தமிழ் விழா மார்ச் மாதம் நிகழ்த்த பெற உள்ளது

1. மன்ற செயலாளர் முது.முனைவர்.க.மகேஸ்வரி
2. மாணவர் செயலாளர் மு.சுபா மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்
3. மாணவர் துணைச் செயலாளர் அ.சரஸ்வதி இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

Tamil Association Report

S.No Academic Year View
1. 2022 - 2023 View
2. 2021 - 2022 View
3. 2020 - 2021 View
4. 2019 – 2020 View
5. 2018 – 2019 View